QR குறியீடு
JioSphere: Web Browser

JioSphere: Web Browser

6.0.3 Jio Platforms Limited ஆல்
(0 விமர்சனங்கள்) மார்ச் 25, 2026
விருப்பமானவை
JioSphere: Web Browser JioSphere: Web Browser JioSphere: Web Browser JioSphere: Web Browser JioSphere: Web Browser JioSphere: Web Browser

சமீபத்திய பதிப்பு

பதிப்பு
6.0.3
புதுப்பிப்பு
மார்ச் 25, 2026
உருவாக்குநர்
Jio Platforms Limited
தளங்கள்
ஆண்ட்ராய்டு
நிறுவல்கள்
0
உரிமம்
Free
தொகுப்பு பெயர்
com.jio.web
பக்கத்தைப் பார்வையிடவும்

JioSphere: Web Browser பற்றி மேலும்

இந்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட JioSphere உடன் புதிய உலாவல் அனுபவத்தைக் கண்டறியுங்கள். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த இந்திய உலாவி, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்களை வழங்குகிறது. இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை பேணிக்காத்து, இந்தியர்களின் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்கிறது. முழுமையாக இந்தியர்களுக்கானது.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் வழங்கும் JioSphere உலாவி, இணைய அனுபவத்தை பாதுகாப்பானதாகவும், தனிப்பட்டதாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள உள்ளமைக்கப்பட்ட VPN, உலகளாவிய உள்ளடக்கத்தை விரைவாக அணுக உதவும். தேவையற்ற கண்கானிப்புகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் Anti-tracking அம்சம், உங்கள் தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பதைத் தடுத்து, இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்கள் மற்றும் தனியுரிமை அச்சுறுத்தல்களில் இருந்து விலகி இருக்க உதவுகிறது. எரிச்சலூட்டும் விளம்பரங்களை நிரந்தரமாக தடுக்கும் மேம்படுத்தப்பட்ட Ad-blocker மூலம், தடையற்ற உலாவலை அனுபவிக்கலாம். மேலும், பின் குறியீட்டைக் கொண்ட Incognito mode, உங்கள் உலாவல் வரலாற்றை சேமிக்காமல், உங்களின் தனிப்பட்ட டேப்களையும் புக்மார்க்குகளையும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இந்தியப் பயனர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட JioSphere, உங்களுக்குத் தேவையானதை உங்கள் மொழியில் வழங்குகிறது. உங்கள் விருப்பத்திற்கேற்ப முகப்புப் பக்கத்தை தனிப்பயனாக்கி, உங்களுக்குப் பிடித்தமான தளங்களை "Quick Pages" ஆக உருவாக்கி உடனடியாக அணுகலாம். நேரடி செய்திகள் மற்றும் தகவல்களுக்கான 'Informative Cards' உங்கள் விரல் நுனியில் இருக்கும். 21க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் இணைய உலாவலை ஆதரிப்பதோடு, உங்கள் விருப்பமான மொழியில் பிரத்யேக செய்தி ஊட்டங்களையும் வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பிராந்திய மொழிகளில் பிரபலமான மற்றும் வைரல் வீடியோக்களை 'Watch' பிரிவில் கண்டுகளிக்கலாம்.

JioSphere ஒரு மேம்படுத்தப்பட்ட மற்றும் வசதியான இணைய அனுபவத்தை உறுதி செய்கிறது. உள்ளமைக்கப்பட்ட QR குறியீடு ஸ்கேனர் மூலம் எந்த ஒரு குறியீட்டையும் எளிதாக ஸ்கேன் செய்யலாம், மேலும் வாய்ஸ் சர்ச் மூலம் இணையதளங்களை குரல் கட்டளைகள் மூலம் திறக்கலாம். Dark Mode அம்சம் கண்கள் கூசாமல் வசதியான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. தானியங்கி வகைப்படுத்தும் download manager, உங்கள் பதிவிறக்கங்களை (படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், பக்கங்கள்) எளிதாக நிர்வகிக்க உதவுகிறது. திரைப்படங்கள் பார்க்கும்போதும் அல்லது கேம்கள் விளையாடும்போதும் landscape view-க்கு மாறலாம். எந்த இணையதளத்திற்கும் ஷார்ட்கட்களை உருவாக்கி, செயலி போன்ற அனுபவத்தைப் பெறலாம். முக்கிய அறிவிப்புகளை Notification Inbox மூலம் கண்காணிக்கலாம், அத்துடன் உள்ளமைந்த கேம்களை விளையாடி மகிழலாம். JioSphere என்பது ஒரு முழுமையான இணைய உலாவி.

பயன்பாட்டை மதிப்பிடவும்

கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்

பயனர் விமர்சனங்கள்

0 விமர்சனங்களின் அடிப்படையில்
5 நட்சத்திரம்
0
4 நட்சத்திரம்
0
3 நட்சத்திரம்
0
2 நட்சத்திரம்
0
1 நட்சத்திரம்
0
கருத்து மற்றும் விமர்சனத்தைச் சேர்க்கவும்
உங்கள் மின்னஞ்சலை வேறு யாருடனும் நாங்கள் பகிர மாட்டோம்.